Skip to main content

பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ?

பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ?



  1. குழந்தைகளுக்கு வாரம் வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஒரு குறைந்த அளவு பணத்தை அவர்களின் செலவுக்காக கொடுத்து பழகுங்கள்: இதன் மூலம் அவர்கள் அந்த பணத்தை வைத்து அவர்களுக்கு வேண்டிய செலவுகளை செய்து கொள்வர். அவ்வாறு செலவு செய்யும் பொழுது பணத்தின் மதிப்பை அவர்கள் உணர முடியும். அவர்கள் எப்பொழுது கேட்டாலும் நீங்கள் பணத்தை கொடுத்தால் அவர்களுக்கு அந்த பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும். பணத்தை சேமிக்க வேண்டுமா அல்லது செலவு செய்வது நல்லதா என்பதும் புரியாது. இதுவே பணத்தை அவர்களின் கைகளில் கொடுத்து செலவு செய்ய சொல்லும் பொழுது அவர்கள் யோசிக்க தொடங்குவர். ஆரம்பத்தில் செலவு செய்வார்கள். கொஞ்ச காலம் போகப்போக அவர்களுக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பிக்கும். எனவே செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிக்க ஆரம்பிப்பர்.
  2. அவர்களின் தேவைக்கு அவர்களே பணத்தை சேமித்து செலவு செய்ய வையுங்கள். குழந்தைகளுக்கு நீங்கள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம் தவறில்லை. உதாரணமாக நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பரிசுகள் சைக்கிள், ஸ்கேட்டிங் போர்டு அல்லது அறிவு சார்ந்த அறிவை வளர்க்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் இவைகளை வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் நல்லது நடக்கும். ஆனால் குழந்தைகள் சில நேரங்களில் வீடியோ கேம் போன்ற தேவையற்ற விளையாட்டு பொருட்களை வாங்கி கேட்பார்கள். இதனை நீங்கள் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம்? அவர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய பணத்தை மிச்சப் படுத்தி அதன் மூலம் பணத்தை சேமித்து பொருட்களை வாங்கிக் கொள்ள நீங்கள் அவர்களை அறிவுறுத்தலாம். இதன் மூலம் அவர்கள் செய்யும் வீண் செலவுகள் குறையும். மேலும் பணத்தின் மதிப்பை அறிய அது ஒரு வாய்ப்பாக அமையும். நீங்கள் பணத்தை மதிப்பில்லாமல் அதிகமாக செலவு செய்தால் அவர்கள் அதை பார்த்து அவர்களும் அதே போல் பணத்தின் மதிப்பை அறியாமல் வீண் செலவு செய்ய ஆரம்பிப்பார்கள். எனவே நீங்கள் பணத்தை சிக்கனமாக அவர்கள் முன் செலவு செய்வது அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்.
  3. தர்மம் செய்ய பழக்கப்படுத்துங்கள்: நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தானம் தர்மம் செய்வதற்கு பழக்கப்படுத்தினால் அது மிகவும் நல்லதாக அமையும். நீங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம், அதாவது உங்கள் குழந்தைகள் தர்மம் செய்யக் கூடிய ஒரு சிறு தொகையானது கஷ்டத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு மிகப்பெரிய உதவியாக அமைகிறது என்பது அவர்களுக்கு காலப்போக்கில் தெரியவரும். இதன்மூலம் அவர்கள் பணத்தின் மதிப்பை அறிவதோடு நல்ல இரக்கமுள்ள, தாராளமான மனதுடைய நல்ல குடிமக்களாக எதிர்காலத்தில் வாழ்வார்கள். 
  4. அவர்களுக்கு சேமிக்கக் கற்றுக் கொடுங்கள் வங்கி கணக்கு ஒன்று துவங்குங்கள்: குழந்தைகள் 8 வயதிற்கு மேல் ஓரளவு புரிந்து கொள்வார்கள் பணத்தின் மதிப்பு பற்றி. எனவே அவர்களுக்கு 8 வயதுக்கு மேல் வங்கி கணக்கு அல்லது சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிய படுத்தி விடுவது நல்லது. குழந்தைகள் 12 வயது அடைவதற்கு முன்பே அவர்களுக்கு ஒரு கணக்கு துவங்கி அதன் மூலம் சேமிக்க பழக்கப்படுத்துவது மிகவும் நல்லது. ஏனென்றால் அந்தப் பருவத்தில் அவர்கள் சேமிக்க துவங்கும் பொழுது அவர்களுக்கு அது நன்மையானதாக அமையும். 12 வயதுக்கு மேல் அவர்களின் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில காரணங்களால் அவர்களின் செயல்கள் மற்றும் நடவடிக்கைகள் மாற ஆரம்பிக்கும். எனவே 12 வயதுக்கு முன் அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி அல்லது வேறு ஏதேனும் சேமிப்பு திட்டங்களை துவங்கி அதன் மூலம் அவர்களை பணத்தை சேமித்து வைப்பது மிகவும் நன்மையானதாக அமையும். தற்போது குழந்தைகள் பணத்தை சேமிப்பதற்கு நிறைய சேமிப்பு திட்டங்கள் அஞ்சலகத்திலும், வங்கிகளிலும் இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் அவர்களை சேர்த்து அவர்களுக்கு பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் அவர்களுக்கு தெரிய வரும் பணம் சேமிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று. அவர்கள் சேமிக்கும் பணத்தின் அளவு வட்டி மூலம் அதிகமாகும் பொழுது அவர்களுக்கு பொருளாதாரம் பற்றிய ஒரு சிந்தனை தோன்றும், வணிகம் எவ்வாறு நடக்கிறது என்பதும் புரியவரும்.
  5. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலத்தின் போதே அவர்களின் கல்லூரி படிப்பின் செலவிற்கான பணத்தை சேமிக்க செய்யுங்கள்: குழந்தைகளின் பள்ளி பருவத்திலிருந்தே அவர்களை சேமிக்க ஊக்கப் படுத்துங்கள். அவர்கள் சேமிக்கும் தொகையானது அவர்களது கல்லூரிப் படிப்பிற்கு உதவும் என்று அவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்களின் கல்லூரி படிப்பிற்கான தொகை அதிகமாக இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். முடிந்த அளவு அவர்கள் சேமித்து அந்த பணத்தை அவர்களின் கல்விக்கு பயன்படுத்தும் பொழுது அவர்களின் கல்வித் தரமும் அதனால் உயரும். அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை வைத்து அவர்கள் படிக்கும் பொழுது நிச்சயம் அவர்கள் நன்றாக படிப்பில் கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்கள் முழு பணத்தையும் கட்டுவதினால் சில குழந்தைகள் பணத்தின் மதிப்பு தெரியாமல், பெற்றோர்களின் கஷ்டம் தெரியாமல் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு வீணாகி விடுகின்றன. கல்வியின் தரம் மேலும் உயர கல்வியின் அவசியம் அவர்களுக்கு புரிய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். எனவே குழந்தைகளை சேமிக்க செய்து அவர்களின் படிப்பிற்கு அந்த பணத்தை பயன்படுத்த செய்வது மிகவும் நல்லது. நீங்கள் குழந்தைகளின் பெயரில் கணக்கு துவங்கும் பொழுது உங்களது பெயரையும்சேர்த்து வைத்திருப்பது நல்லது. ஏனெனில் சில குழந்தைகள் கல்லூரிப் பருவத்தை அடைந்த காலத்தில் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை நல்ல வழியில் பயன்படுத்தாமல் சொகுசு கார்கள், பைக், மொபைல் போன் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வாங்கி வீணாக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த சேமித்த பணம் அவர்களின் கல்விக்கு மட்டும் பயன்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் அவர்களுக்கு உருவாக்கக்கூடிய கணக்கில் சேர்ந்து இருப்பது மிகவும் நல்லதாக அமையும்.
  6. குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கிக் கொடுத்து அதில் பணத்தை சேமிக்க அவர்களை ஊக்குவியுங்கள். இதன் மூலம் " சிறு துளி பெரு வெள்ளம் " என்ற பழமொழிக்கு ஏற்ப குழந்தைகள் சேர்க்கக் கூடிய சிறு பணம் ஒரு நாள் பெரிய பணமாக உருவெடுக்கும்.


Comments

  1. மிகவும் அவசியமான உபயோகமுள்ள
    பதிவு... மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
    மேலும் பல நல்ல ஆலோசனைகளை வழங்கி எல்லோர்க்கும் உதவும் வகையில் பதிவுகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Your opinion is our key to success !!

Popular posts from this blog

கோடையில் நம்மைக் காத்துக்கொள்வதெப்படி?

கோடையில் நம்மைக் காத்துக்கொள்வதெப்படி ? இது மார்ச் மாதம்தான் ஆனால் அடிக்கும் வெயிலோ இது மார்ச் மாதமா அல்லது ஏப்ரல் மே மாதமா என நினைக்க வைக்கின்றது. வெயிலின் சீற்றம் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். இதற்கு சில வழிகளில் நாம் தீர்வு காணலாம். நம்மை காத்துக்கொள்ளலாம். * முடிந்த அளவிற்கு தூய்மையான குடிநீர் அருந்தவும். * பருத்தி ஆடைகளை அணியவும். * ஆடைகளை தளர்வாக அணியவும்.  இருக்கமாக அணிய வேண்டாம். * இறைவன் வரமாக அளித்த உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை ( தர்பூசணி , வெள்ளரி பழம், ஆரஞ்சு ...இன்னும் பல ) சாப்பிடவும். * தியானம் செய்யலாம். மனமும் உடலும் அமைதி பெறும். * இயற்கை பானமான இளநீரை அருந்தலாம்.  * மோர் மற்றும் தயிர் தினமும் சாப்பிடவும். * அதிகாலை மற்றும் மாலை சூரியன் மறைந்ததும் வெளியே செல்லலாம். * உச்சி வெயிலில் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்கவும். * வெளியே செல்லும்போது வண்ண குடைகளை பயன்படுத்தவும். * கைப்பையில் தண்ணீர் பாட்டில் தவராமல் எடுத்து செல்லவும். * வீட்டில் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து பயன்ப

How to transfer money from ICICI paylater account to Airtel payments bank and other banks

How to transfer money from ICICI paylater account to Airtel payments bank and other banks? ICICI paylater account can be used for bill payments. Do you know that you can transfer money from it..!! You can transfer the money in your paylater account to bank through Airtel payment bank. Steps involved in this process : 1) Open Airtel payments bank app in your mobile 2) Click Banking 3) Click ADD money 4) Enter the money you want to add from paylater account ( please note Rs.2000 is the limit for one transaction. Rs.4000 is the maximum  translation amount per day )  5) Then select ICICI NET BANKING 6) Login to your ICICI BANK NET BANKING  using user id and password ( or ) you can login using your registered mobile number using OTP. 7) Select Paylater account Thats it !! Transaction will be completed and amount  and you will get notified via SMS. 8) You can check the status of the transaction by selecting transaction history.. SEND MONEY 💰 TO OTHER BANKS 1) Open Airtel payments bank app 2

How to fill up deposit slip of post office savings accounts?

How to fill up deposit slip of post office savings accounts?