Spam and phising stay safe online SBI Announcement !!!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு !!!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு !!!
இப்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் நிறைய பண பரிவர்த்தனைகள் ஆன்லைனில் மூலம் செய்யவேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மின்கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி வங்கிகள் பரிமாற்றம் போன்ற பணம் கட்டுதல் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. எனவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து வங்கிகளும் இந்த ஏமாற்று வேலைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. நீங்கள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் இணைய தளத்தை பயன்படுத்தும் போதும் உங்களுடைய விபரங்களை இணையத்தில் சமர்ப்பிக்கும் போதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்யும் பொழுதும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உங்களை எவ்வாறு ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்?
சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
நினைவில் கொள்க :
- ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு இந்த இமெயில் முகவரியில் இருந்து வந்தாலும் இலவசமாக கரோனா வைரஸ் டெஸ்ட் செய்யப்படுகிறது, இந்த லிங்கை கிளிக் செய்யவும், இது போன்று ஏதேனும் ஈமெயில் வந்தாலும் அதனை கிளிக் செய்ய வேண்டாம்.
- கரோனா வைரஸ் சோதனை பற்றி நிறைய குறுஞ்செய்திகளும் உங்களுக்கு தொலைபேசியில் வந்து கொண்டிருக்கிறது. குறுஞ்செய்திகள் ஏமாற்றுக் காரர்களால் அனுப்பப்படலாம். எனவே உங்களுக்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளில் ஏதேனும் இணைப்பு இருந்தால் அதனை க்ளிக் செய்ய வேண்டாம்.
- போலியான யுபிஐ UPI ID முகவரி இப்போது இணையதளத்தில் நிறைய பரவி வருகிறது. பிரதம மந்திரி நிவாரண நிதி என்ற பெயரில் நிறைய போலியான யுபிஐ முகவரி வருகின்றது. அதன் மூலம் நீங்கள் பணம் செலுத்தினால் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே நாங்கள் இங்கு சரியான UPI ID யுபிஐ முகவரியைக் கீழே கொடுக்கின்றோம்.
The correct id is:
pmcares@sbi
அதனை சரி பார்த்துக் கொள்ளவும்.
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அலுவலர்கள் யாரும் உங்களுடைய டெபிட் கார்டு, அதன் CVV நம்பர், அதனுடைய காலாவதியாகும் தேதி EXPIRY DATE மற்றும் ஒருமுறை வரக்கூடிய கடவுச்சொல் இது பற்றி எதுவுமே கேட்க மாட்டார்கள். யாரேனும் இந்த தகவல்களை தரும்படி உங்களை அணுகினால் உங்கள் விவரங்களை தயவுசெய்து தெரியப்படுத்தி விடவேண்டாம் பாதுகாப்பாக இருக்கவும்.
- தற்போது இஎம்ஐ EMI MORATORIUM அதாவது கடனை காலம் தாழ்த்தி செலுத்தக்கூடிய சட்ட உரிமையை அனைத்து வங்கிகளும் தனது பயனாளர்களுக்கு அளித்துள்ளது. இது சம்பந்தமான குறுஞ்செய்திகளை மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியும் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே எந்த ஒரு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் EMI MORATORIUM பற்றி வந்தால் நேரடியாக வங்கியை அணுகவும். எந்த ஒரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று வங்கிகளால் பரிந்துரைக்கப்படுகிறது.
- மேலும் அங்கீகரிக்கப்படாத குறுஞ்செய்திகள் மற்றும் ஈமெயில்கள் ஏதேனும் இணைப்பு உடன் சேர்ந்து வந்தாலும் அதனை கிளிக் செய்ய வேண்டாம். இணையதள முகவரியில் இதுபோன்ற குறியீடு இருந்தால்
' / 'கிளிக் செய்ய வேண்டாம் ' https:// ' இது சரியானது.
- ஏதேனும் இலக்கணப்பிழை மற்றும் ஏதேனும் எழுத்து பிழைகள் இருந்தால் அவை போலியான இணையதளம் மற்றும் செய்தி என்பதை குறிப்பிடப்படுகிறது. எனவே அது போன்று ஏதேனும் தவறான பிழைகள் இருக்கக்கூடிய குறுஞ்செய்திகள் மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்தால் அதனை க்ளிக் செய்ய வேண்டாம்.
Comments
Post a comment
Your opinion is our key to success !!