Skip to main content
கூந்தலை வளரச் செய்ய குறிப்புகள்:
கூந்தல் நீண்டு வளர்வதற்கு தரமான எண்ணெய் மற்றும் ஷாம்பு எப்படி முக்கியமோ, அதேபோல் கண்டிஷனரும் கூந்தலுக்கு தேவை. ஏனெனில் எண்ணெய் கூந்தலின் வேர்கால்களை தூண்டி வளரச் செய்யும். ஆனால் அவற்றை போஷாக்குடன் வளரச் செய்ய கண்டிஷனர் தேவை. இல்லையெனில் எவ்வளவுதான் முடி வளர்ந்தாலும் எளிதில் பலமிழந்து உதிர்ந்துவிடும். கண்டிஷனர் என்பது கடைகளில் வாங்குவதை பற்றி சொல்லவில்லை. கூந்தலுக்கு போஷாக்கினையும் ஈரப்பத்தையும் தரும் எளிய பொருட்களைத்தான். அப்படியான 3 கண்டிஷனரை இப்போது எப்படி நாமே வீட்டில் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்.

 இவை எல்லாவற்றையும் கலந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசுங்கள்.

இவை கூந்தலில் உள்ள வறட்சியை போக்கிவிடும். ஈரப்பதத்தை தரும். பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்கும்.

தேங்காய் பால் கண்டிஷனர்:
தேங்காய் பால் - கால் கப்
 தேன் - 2 டேபிள் ஸ்பூன்
 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1
ரோஸ் வாட்டர் -- சில துளிகள்
கிளிசரின் - சில துளிகள்.

 முதலில் இங்கு குறிப்பிட்டுள்ள எல்லா கலவைகளையும் கலக்க வேண்டும். கடைசியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலிருக்கும் திரவத்தை ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, முடியின் நுனி வரை போட்டு, தலையை ஒரு பாலிதின் கவரால் மூடி விடுங்கள்.
 அரை மணி நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

இது மிகச் சிறந்த கண்டிஷனர். கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். வாரம் ஒரு முறை செய்தால் உங்கள் கூந்தலின் அழகை பார்த்து நீங்களே ரசிப்பீர்கள்.

தேங்காய் பால் பாதாம் எண்ணெய் கலவை: தேங்காய் பால்-1 டேபிள் ஸ்பூன்
தேன்-1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்-சில துளி
ரோஸ் வாட்டர்- சில துளி
பால் - 1 டேபிள் ஸ்பூன்

இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் தலையில் ஊற விடுங்கள். பின் நீரில் அலசவும்.

வாரம் தவறாமல் இப்படி செய்தால் முடி உதிர்தல் பொடுகு ஆகிய பிரச்சனைகள் நீங்கி, கூந்தல் அழகாய் ஜொலிப்பதை நீங்கள் உணரக் கூடும். மேலே சொன்ன எல்லாமே புரோட்டின் நிறைந்த பொருட்கள். இவை கூந்தல் வளரத் தேவையான போஷாக்கினை வேர்க்கால்கள் மூலம் அளிக்கும். வறண்ட கூந்தல் பெற்றிருப்பவர்களுக்கு, அரிப்பு, எரிச்சல் முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாது. கூந்தல் பட்டு போன்று மிளிரும்.

Comments

Popular posts from this blog

6 சர்வேக்கள் மூலம் 50 அமெரிக்க டாலர்கள் சம்பாதிப்பது எப்படி ?

ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி? நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மற்றும் பல நாடுகளில் ஆன்லைன் சர்வேக்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் மிக மிக ஏராளம். பணம் சம்பாதிக்க வேண்டும் !! ஏதேனும் வழி இருக்கிறதா ? என்று தினம் தினம் இணையதளத்தை தேடி அலைபவர்கள் ஏராளம். இங்கு நான் உங்களுக்கு ஒரு எளிதான வழியை காண்பிக்க போகிறேன்…!! அதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 50 டாலர் சம்பாதிக்க முடியும். அதாவது இந்திய மதிப்பில் தற்போதைய விலை நிலவரப்படி ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல் நீங்கள் சம்பாதிக்க முடியும்…!! பணம் கிடைத்ததற்கான ஆதாரம் 👇  வெறும் 6 சர்வேக்கள் மூலம் எப்படி இவ்வாறு சம்பாதிக்க இயலும் ? என்று நீங்கள் நினைக்கலாம் ! அது எப்படி என்று இங்கு விரிவாக காண்போம்… YOUGOV SURVEY இதுதான் அந்த சர்வே கம்பெனி. முதலில் இந்த சர்வே கம்பெனியில் நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும்.  இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு இமெயில் அக்கவுண்ட், தொலைபேசி அல்லது கணிணி, இண்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது.  நீங்கள் இதற்காக பயன்படுத்

HOW TO BOOK IPL 2019 CRICKET TICKET ONLINE ? ஆன்லைனில் கிரிக்கெட் டிக்கெ...

Now it is easy to book ipl cricket match tickets from your mobile, just sitting at home. Here you go !! Watch the video for more information...! Best games

HOW TO FILL UP MONEY ORDER FORM (POST OFFICE)?