Wednesday, 20 May 2020

கூந்தலை வளரச் செய்ய குறிப்புகள்:
கூந்தல் நீண்டு வளர்வதற்கு தரமான எண்ணெய் மற்றும் ஷாம்பு எப்படி முக்கியமோ, அதேபோல் கண்டிஷனரும் கூந்தலுக்கு தேவை. ஏனெனில் எண்ணெய் கூந்தலின் வேர்கால்களை தூண்டி வளரச் செய்யும். ஆனால் அவற்றை போஷாக்குடன் வளரச் செய்ய கண்டிஷனர் தேவை. இல்லையெனில் எவ்வளவுதான் முடி வளர்ந்தாலும் எளிதில் பலமிழந்து உதிர்ந்துவிடும். கண்டிஷனர் என்பது கடைகளில் வாங்குவதை பற்றி சொல்லவில்லை. கூந்தலுக்கு போஷாக்கினையும் ஈரப்பத்தையும் தரும் எளிய பொருட்களைத்தான். அப்படியான 3 கண்டிஷனரை இப்போது எப்படி நாமே வீட்டில் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்.

 இவை எல்லாவற்றையும் கலந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசுங்கள்.

இவை கூந்தலில் உள்ள வறட்சியை போக்கிவிடும். ஈரப்பதத்தை தரும். பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்கும்.

தேங்காய் பால் கண்டிஷனர்:
தேங்காய் பால் - கால் கப்
 தேன் - 2 டேபிள் ஸ்பூன்
 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1
ரோஸ் வாட்டர் -- சில துளிகள்
கிளிசரின் - சில துளிகள்.

 முதலில் இங்கு குறிப்பிட்டுள்ள எல்லா கலவைகளையும் கலக்க வேண்டும். கடைசியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலிருக்கும் திரவத்தை ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, முடியின் நுனி வரை போட்டு, தலையை ஒரு பாலிதின் கவரால் மூடி விடுங்கள்.
 அரை மணி நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

இது மிகச் சிறந்த கண்டிஷனர். கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். வாரம் ஒரு முறை செய்தால் உங்கள் கூந்தலின் அழகை பார்த்து நீங்களே ரசிப்பீர்கள்.

தேங்காய் பால் பாதாம் எண்ணெய் கலவை: தேங்காய் பால்-1 டேபிள் ஸ்பூன்
தேன்-1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்-சில துளி
ரோஸ் வாட்டர்- சில துளி
பால் - 1 டேபிள் ஸ்பூன்

இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் தலையில் ஊற விடுங்கள். பின் நீரில் அலசவும்.

வாரம் தவறாமல் இப்படி செய்தால் முடி உதிர்தல் பொடுகு ஆகிய பிரச்சனைகள் நீங்கி, கூந்தல் அழகாய் ஜொலிப்பதை நீங்கள் உணரக் கூடும். மேலே சொன்ன எல்லாமே புரோட்டின் நிறைந்த பொருட்கள். இவை கூந்தல் வளரத் தேவையான போஷாக்கினை வேர்க்கால்கள் மூலம் அளிக்கும். வறண்ட கூந்தல் பெற்றிருப்பவர்களுக்கு, அரிப்பு, எரிச்சல் முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாது. கூந்தல் பட்டு போன்று மிளிரும்.

Saturday, 2 May 2020

How do you increase visitors to your blog using Facebook?

ஃபேஸ்புக் மூலம் உங்கள் வலைதளத்திற்கு அதிக பயனாளர்களை வரவழைப்பது எப்படி?
முகவுரை:
ஃபேஸ்புக் அல்லது முகநூல் இன்று உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்ற ஒன்றாகும்.
இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் பொழுதுபோக்கு, உலக நடப்பு தெரிந்து கொள்ள, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைப்பில் இருக்க, வியாபாரம் செய்ய மற்றும் பல காரணங்களுக்காக இதனை உபயோகித்து வருகிறார்கள்.

நீங்கள் உங்களுடைய சொந்த வலைத்தளத்தைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தவும் அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் ஃபேஸ்புக் எவ்வாறு உங்களுக்கு உதவும் என்று இந்த கட்டுரையில் காணலாம்.

நிச்சயமாக இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும் வகையில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி...!!!  இந்த கட்டுரையை படிக்கும் உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...பல...!!!

ஃபேஸ்புக் பக்கம் உருவாக்க வேண்டும்:
ஃபேஸ்புக்கில் நீங்கள் முதலில் கணக்கு தொடங்கி , அதில் உங்களுக்கென ஒரு பக்கத்தை உருவாக்கவும். அதன் தலைப்பு உங்கள் வலைதளத்தின் பெயரை ஒற்றிருந்தால் மிகவும் நலம்.

பயனுள்ள தகவல்கள் சில:
  • பதிவுகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடவும்.
  • உங்கள் பதிவுகளை உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பகிருங்கள். 
  • ஃபேஸ்புக்குரூப்களில்  உங்கள் பதிவுகளை பகிரவும்.
  • உங்கள் வலைத்தள பதிவுகளில் படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டால் காண்போரை கவரும்.
  • வழமையாக ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் பதிவுகளை பதிவிடவும்.
  • உங்கள்  ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் வலைப்பக்கத்தின் இணைப்பை கொடுக்கவும்.
_____________________________________________

JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net

6 சர்வேக்கள் மூலம் 50 அமெரிக்க டாலர்கள் சம்பாதிப்பது எப்படி ?

ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி? நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது...