Thursday, 17 September 2020

6 சர்வேக்கள் மூலம் 50 அமெரிக்க டாலர்கள் சம்பாதிப்பது எப்படி ?

ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி?




நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மற்றும் பல நாடுகளில் ஆன்லைன் சர்வேக்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் மிக மிக ஏராளம். பணம் சம்பாதிக்க வேண்டும் !! ஏதேனும் வழி இருக்கிறதா ? என்று தினம் தினம் இணையதளத்தை தேடி அலைபவர்கள் ஏராளம். இங்கு நான் உங்களுக்கு ஒரு எளிதான வழியை காண்பிக்க போகிறேன்…!! அதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 50 டாலர் சம்பாதிக்க முடியும். அதாவது இந்திய மதிப்பில் தற்போதைய விலை நிலவரப்படி ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல் நீங்கள் சம்பாதிக்க முடியும்…!!

 வெறும் 6 சர்வேக்கள் மூலம் எப்படி இவ்வாறு சம்பாதிக்க இயலும் ? என்று நீங்கள் நினைக்கலாம் ! அது எப்படி என்று இங்கு விரிவாக காண்போம்…


YOUGOV SURVEY


இதுதான் அந்த சர்வே கம்பெனி. முதலில் இந்த சர்வே கம்பெனியில் நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும். 


இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு இமெயில் அக்கவுண்ட், தொலைபேசி அல்லது கணிணி, இண்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. 


நீங்கள் இதற்காக பயன்படுத்தும் இமெயில் அக்கவுண்ட் உங்களின் பேடிஎம் அக்கவுண்ட்ல் பயன்படுத்திய இமெயில் அக்கவுண்ட் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது பேடிஎம்ல் கணக்கு துவங்க நீங்கள் பயன்படுத்திய ஜிமெயில் அக்கவுண்ட்டை தான் இந்த சர்வே கம்பெனியில் இணையவும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதன் மூலம் நீங்கள் பணமாக பேடிஎம் அக்கவுண்டில் பெரும்பொழுது ஜிமெயில் அக்கவுண்ட் மாறி இருந்தால் உங்களுக்கு பணம் கிடைக்காது. எனவே யூகவ் மற்றும் பேட்டியம் அக்கவுண்ட் இரண்டிற்கும் ஒரே இமெயில் முகவரி பயன்படுத்தவேண்டியது மிக மிக முக்கியம்.


ஜிமெயில் அக்கவுண்ட் மற்றும் உங்கள் பெயர் மற்றும் கேட்கப்படும் விவரங்களையும் பூர்த்தி செய்தபின் உங்களுக்கு யூ கவ் கம்பெனியில் ஒரு அக்கவுண்ட் உருவாகிவிடும். பிறகு உங்களுக்கு சர்வே அழைப்புகள் வர ஆரம்பிக்கும். சர்வே எத்தனை வரும் எப்பொழுது வரும் என்று சொல்ல இயலாது. நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள உங்களின் விவரங்கள் இதைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வருகின்ற சர்வேக்களின் அளவு மாறுபடும். உங்களுக்கு வரக்கூடிய சர்வேக்கள் ஜி மெயில் மூலமாக அனுப்பப்படும். அல்லது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு சர்வேக்கள் வரவேண்டும் என்றால் உங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். ஈமெயில் அல்லது தொலைபேசி மூலம் உங்களுக்கு சர்வே அழைப்புகள் வர ஆரம்பிக்கும். நீங்கள் ஒவ்வொரு சர்வேவிற்கும் பதில் அளிக்க வேண்டும். நீங்கள் பதில் அளிக்கும் ஒவ்வொரு சர்வேவிற்க்கும் 25 புள்ளிகள், 50 புள்ளிகள், 100 புள்ளிகள், 150 மற்றும் 200 புள்ளிகள் வரைக்கும் கூட வழங்கப்படும்.

இது போன்று நீங்கள் சர்வே அழைப்புகளை ஏற்று பதிலளித்து வரவும். சர்வே அழைப்புகள் வந்த உடனே பதில் அளிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் சர்வே அழைப்பு வந்து நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் கழித்து நீங்கள் அந்த இணைப்பை சென்று பார்க்கும் பொழுது அது காலாவதியாகி ஆகி இருக்கும். 


மேலும் நீங்கள் இந்த சர்வே கம்பெனி பற்றி மற்றவர்களுக்கு பகிர்வதினால் மிகவும் பணம் அதிகமாக சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று காணலாம்.


நீங்கள் இணைப்பு அனுப்பிய ஒவ்வொருவரும் அந்த இணைப்பின் மூலம் இந்த சர்வே கம்பெனியில் இணைந்து அவர்களுக்கு வரக்கூடிய சர்வே அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தலா ஆறு சர்வே அழைப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பொழுது உங்களுக்கு 200 புள்ளிகள் வழங்கப்படும்.


 உதாரணமாக நீங்கள் 25 பேருக்கு இந்த சர்வே கம்பெனி பற்றிய இணைப்பை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 25 பேரும் வெற்றிகரமாக ஆறு சர்வேக்கள் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் பொழுது உங்களுக்கு 25 × 200 =மொத்தம் 5000 புள்ளிகள் கிடைக்கப்பெறும். இது மிகவும் சுலபமாக உள்ளது அல்லவா ?



உங்களுக்கு 5000 புள்ளிகள் கிடைத்த பிறகு நீங்கள் பேடிஎம் மூலமாக அந்த புள்ளிகளுக்கு பதிலாக பணமாக பெற்றுக்கொள்ள இயலும். 5000 புள்ளிகளுக்கு 50 டாலர்கள் வழங்கப்படும். தற்போது நிலவும் அமெரிக்க டாலர் விலை நிலவரப்படி ரூபாய் பணமாக உங்கள் பேடிஎம் கணக்கில் கிடைக்கும்.


யூகவ் சர்வேயில் இணைய இங்கு க்ளிக் செய்யவும் ( அழுத்தவும் ) 👇

JOIN YOUGOV யூகவில் இணையவும்


இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி நிறைய பதிவுகளை பதிவிட உள்ளேன். உங்களின் மேலான ஆதரவை தெரிவிக்கவும் நன்றி.. 


நாம் சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் இந்த பதிவு நிச்சயம் உதவியாக இருக்கும்..


 நாமும் வாழ்க்கையில் முன்னேறி நம்மை சார்ந்தவர்களையும் முன்னேறச் செய்து நம் நாட்டை முன்னேற்ற பாதையில் பயணிக்க செய்வோம்..!!


 வாழ்க வையகம் !!


பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ?

பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு புரிய வைப்பது ?



  1. குழந்தைகளுக்கு வாரம் வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஒரு குறைந்த அளவு பணத்தை அவர்களின் செலவுக்காக கொடுத்து பழகுங்கள்: இதன் மூலம் அவர்கள் அந்த பணத்தை வைத்து அவர்களுக்கு வேண்டிய செலவுகளை செய்து கொள்வர். அவ்வாறு செலவு செய்யும் பொழுது பணத்தின் மதிப்பை அவர்கள் உணர முடியும். அவர்கள் எப்பொழுது கேட்டாலும் நீங்கள் பணத்தை கொடுத்தால் அவர்களுக்கு அந்த பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும். பணத்தை சேமிக்க வேண்டுமா அல்லது செலவு செய்வது நல்லதா என்பதும் புரியாது. இதுவே பணத்தை அவர்களின் கைகளில் கொடுத்து செலவு செய்ய சொல்லும் பொழுது அவர்கள் யோசிக்க தொடங்குவர். ஆரம்பத்தில் செலவு செய்வார்கள். கொஞ்ச காலம் போகப்போக அவர்களுக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பிக்கும். எனவே செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிக்க ஆரம்பிப்பர்.
  2. அவர்களின் தேவைக்கு அவர்களே பணத்தை சேமித்து செலவு செய்ய வையுங்கள். குழந்தைகளுக்கு நீங்கள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம் தவறில்லை. உதாரணமாக நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பரிசுகள் சைக்கிள், ஸ்கேட்டிங் போர்டு அல்லது அறிவு சார்ந்த அறிவை வளர்க்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் இவைகளை வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் நல்லது நடக்கும். ஆனால் குழந்தைகள் சில நேரங்களில் வீடியோ கேம் போன்ற தேவையற்ற விளையாட்டு பொருட்களை வாங்கி கேட்பார்கள். இதனை நீங்கள் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம்? அவர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய பணத்தை மிச்சப் படுத்தி அதன் மூலம் பணத்தை சேமித்து பொருட்களை வாங்கிக் கொள்ள நீங்கள் அவர்களை அறிவுறுத்தலாம். இதன் மூலம் அவர்கள் செய்யும் வீண் செலவுகள் குறையும். மேலும் பணத்தின் மதிப்பை அறிய அது ஒரு வாய்ப்பாக அமையும். நீங்கள் பணத்தை மதிப்பில்லாமல் அதிகமாக செலவு செய்தால் அவர்கள் அதை பார்த்து அவர்களும் அதே போல் பணத்தின் மதிப்பை அறியாமல் வீண் செலவு செய்ய ஆரம்பிப்பார்கள். எனவே நீங்கள் பணத்தை சிக்கனமாக அவர்கள் முன் செலவு செய்வது அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்.
  3. தர்மம் செய்ய பழக்கப்படுத்துங்கள்: நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தானம் தர்மம் செய்வதற்கு பழக்கப்படுத்தினால் அது மிகவும் நல்லதாக அமையும். நீங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம், அதாவது உங்கள் குழந்தைகள் தர்மம் செய்யக் கூடிய ஒரு சிறு தொகையானது கஷ்டத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு மிகப்பெரிய உதவியாக அமைகிறது என்பது அவர்களுக்கு காலப்போக்கில் தெரியவரும். இதன்மூலம் அவர்கள் பணத்தின் மதிப்பை அறிவதோடு நல்ல இரக்கமுள்ள, தாராளமான மனதுடைய நல்ல குடிமக்களாக எதிர்காலத்தில் வாழ்வார்கள். 
  4. அவர்களுக்கு சேமிக்கக் கற்றுக் கொடுங்கள் வங்கி கணக்கு ஒன்று துவங்குங்கள்: குழந்தைகள் 8 வயதிற்கு மேல் ஓரளவு புரிந்து கொள்வார்கள் பணத்தின் மதிப்பு பற்றி. எனவே அவர்களுக்கு 8 வயதுக்கு மேல் வங்கி கணக்கு அல்லது சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிய படுத்தி விடுவது நல்லது. குழந்தைகள் 12 வயது அடைவதற்கு முன்பே அவர்களுக்கு ஒரு கணக்கு துவங்கி அதன் மூலம் சேமிக்க பழக்கப்படுத்துவது மிகவும் நல்லது. ஏனென்றால் அந்தப் பருவத்தில் அவர்கள் சேமிக்க துவங்கும் பொழுது அவர்களுக்கு அது நன்மையானதாக அமையும். 12 வயதுக்கு மேல் அவர்களின் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில காரணங்களால் அவர்களின் செயல்கள் மற்றும் நடவடிக்கைகள் மாற ஆரம்பிக்கும். எனவே 12 வயதுக்கு முன் அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி அல்லது வேறு ஏதேனும் சேமிப்பு திட்டங்களை துவங்கி அதன் மூலம் அவர்களை பணத்தை சேமித்து வைப்பது மிகவும் நன்மையானதாக அமையும். தற்போது குழந்தைகள் பணத்தை சேமிப்பதற்கு நிறைய சேமிப்பு திட்டங்கள் அஞ்சலகத்திலும், வங்கிகளிலும் இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் அவர்களை சேர்த்து அவர்களுக்கு பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் அவர்களுக்கு தெரிய வரும் பணம் சேமிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று. அவர்கள் சேமிக்கும் பணத்தின் அளவு வட்டி மூலம் அதிகமாகும் பொழுது அவர்களுக்கு பொருளாதாரம் பற்றிய ஒரு சிந்தனை தோன்றும், வணிகம் எவ்வாறு நடக்கிறது என்பதும் புரியவரும்.
  5. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலத்தின் போதே அவர்களின் கல்லூரி படிப்பின் செலவிற்கான பணத்தை சேமிக்க செய்யுங்கள்: குழந்தைகளின் பள்ளி பருவத்திலிருந்தே அவர்களை சேமிக்க ஊக்கப் படுத்துங்கள். அவர்கள் சேமிக்கும் தொகையானது அவர்களது கல்லூரிப் படிப்பிற்கு உதவும் என்று அவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்களின் கல்லூரி படிப்பிற்கான தொகை அதிகமாக இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். முடிந்த அளவு அவர்கள் சேமித்து அந்த பணத்தை அவர்களின் கல்விக்கு பயன்படுத்தும் பொழுது அவர்களின் கல்வித் தரமும் அதனால் உயரும். அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை வைத்து அவர்கள் படிக்கும் பொழுது நிச்சயம் அவர்கள் நன்றாக படிப்பில் கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்கள் முழு பணத்தையும் கட்டுவதினால் சில குழந்தைகள் பணத்தின் மதிப்பு தெரியாமல், பெற்றோர்களின் கஷ்டம் தெரியாமல் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு வீணாகி விடுகின்றன. கல்வியின் தரம் மேலும் உயர கல்வியின் அவசியம் அவர்களுக்கு புரிய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். எனவே குழந்தைகளை சேமிக்க செய்து அவர்களின் படிப்பிற்கு அந்த பணத்தை பயன்படுத்த செய்வது மிகவும் நல்லது. நீங்கள் குழந்தைகளின் பெயரில் கணக்கு துவங்கும் பொழுது உங்களது பெயரையும்சேர்த்து வைத்திருப்பது நல்லது. ஏனெனில் சில குழந்தைகள் கல்லூரிப் பருவத்தை அடைந்த காலத்தில் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை நல்ல வழியில் பயன்படுத்தாமல் சொகுசு கார்கள், பைக், மொபைல் போன் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வாங்கி வீணாக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த சேமித்த பணம் அவர்களின் கல்விக்கு மட்டும் பயன்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் அவர்களுக்கு உருவாக்கக்கூடிய கணக்கில் சேர்ந்து இருப்பது மிகவும் நல்லதாக அமையும்.
  6. குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கிக் கொடுத்து அதில் பணத்தை சேமிக்க அவர்களை ஊக்குவியுங்கள். இதன் மூலம் " சிறு துளி பெரு வெள்ளம் " என்ற பழமொழிக்கு ஏற்ப குழந்தைகள் சேர்க்கக் கூடிய சிறு பணம் ஒரு நாள் பெரிய பணமாக உருவெடுக்கும்.


Wednesday, 1 July 2020

TOP 5 BEAUTY TIPS

TOP 5 BEAUTY TIPS USING HONEY :
5 honey beauty tips !
Benefits of using Honey :
1) Natural anti-ageing gel
2) Packed with lots of nutrients
3) It is a natural humectant
( attracts & retains moisture from the air )
4)  It has antioxidant, anti microbial,
anti fungal and anti bacterial activity )
5) It is an excellent exfoliator
Video covers:
1) Honey mask
2) Natural face mask
3) Banana honey mask
4) Lip mask
5) Mask for sunburn



Tuesday, 30 June 2020

Spam and phising stay safe online SBI Announcement

Spam and phising stay safe online SBI Announcement !!!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு !!!



        இப்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் நிறைய பண பரிவர்த்தனைகள் ஆன்லைனில் மூலம் செய்யவேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மின்கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி வங்கிகள் பரிமாற்றம் போன்ற பணம் கட்டுதல் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. எனவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து வங்கிகளும் இந்த ஏமாற்று வேலைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. நீங்கள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் இணைய தளத்தை பயன்படுத்தும் போதும் உங்களுடைய விபரங்களை இணையத்தில் சமர்ப்பிக்கும் போதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்யும் பொழுதும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உங்களை எவ்வாறு ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்? 
 சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

 நினைவில் கொள்க :
  1. ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு இந்த இமெயில் முகவரியில் இருந்து வந்தாலும் இலவசமாக கரோனா வைரஸ் டெஸ்ட் செய்யப்படுகிறது, இந்த லிங்கை கிளிக் செய்யவும், இது போன்று ஏதேனும் ஈமெயில் வந்தாலும் அதனை கிளிக் செய்ய வேண்டாம். 
  2.  கரோனா வைரஸ் சோதனை பற்றி நிறைய குறுஞ்செய்திகளும் உங்களுக்கு தொலைபேசியில் வந்து கொண்டிருக்கிறது. குறுஞ்செய்திகள் ஏமாற்றுக் காரர்களால் அனுப்பப்படலாம். எனவே உங்களுக்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளில் ஏதேனும் இணைப்பு இருந்தால் அதனை க்ளிக் செய்ய வேண்டாம். 
  3.  போலியான யுபிஐ UPI ID முகவரி இப்போது இணையதளத்தில் நிறைய பரவி வருகிறது. பிரதம மந்திரி நிவாரண நிதி என்ற பெயரில் நிறைய போலியான யுபிஐ முகவரி வருகின்றது. அதன் மூலம் நீங்கள் பணம் செலுத்தினால் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே நாங்கள் இங்கு சரியான UPI ID யுபிஐ முகவரியைக் கீழே கொடுக்கின்றோம்.


The correct id is:
pmcares@sbi


 அதனை சரி பார்த்துக் கொள்ளவும். 
  1.  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அலுவலர்கள் யாரும் உங்களுடைய டெபிட் கார்டு, அதன் CVV நம்பர், அதனுடைய காலாவதியாகும் தேதி EXPIRY DATE மற்றும் ஒருமுறை வரக்கூடிய கடவுச்சொல் இது பற்றி எதுவுமே கேட்க மாட்டார்கள். யாரேனும் இந்த தகவல்களை தரும்படி உங்களை அணுகினால் உங்கள் விவரங்களை தயவுசெய்து தெரியப்படுத்தி விடவேண்டாம் பாதுகாப்பாக இருக்கவும்.
  2.  தற்போது இஎம்ஐ EMI  MORATORIUM அதாவது கடனை காலம் தாழ்த்தி செலுத்தக்கூடிய சட்ட உரிமையை அனைத்து வங்கிகளும் தனது பயனாளர்களுக்கு அளித்துள்ளது. இது சம்பந்தமான குறுஞ்செய்திகளை மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியும் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே எந்த ஒரு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் EMI MORATORIUM பற்றி வந்தால் நேரடியாக வங்கியை அணுகவும். எந்த ஒரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று வங்கிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. 
  3.  மேலும் அங்கீகரிக்கப்படாத குறுஞ்செய்திகள் மற்றும் ஈமெயில்கள் ஏதேனும் இணைப்பு உடன் சேர்ந்து வந்தாலும் அதனை கிளிக் செய்ய வேண்டாம். இணையதள முகவரியில் இதுபோன்ற குறியீடு இருந்தால் 
' / 'கிளிக் செய்ய வேண்டாம் ' https:// ' இது சரியானது.
  1.  ஏதேனும் இலக்கணப்பிழை மற்றும் ஏதேனும் எழுத்து பிழைகள் இருந்தால் அவை போலியான இணையதளம் மற்றும் செய்தி என்பதை குறிப்பிடப்படுகிறது. எனவே அது போன்று ஏதேனும் தவறான பிழைகள் இருக்கக்கூடிய குறுஞ்செய்திகள் மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்தால் அதனை க்ளிக் செய்ய வேண்டாம்.

Friday, 26 June 2020

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?
புதுவை அரசு மின் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்துவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மொபைல் இண்டெர்நெட் சேவையை ஆன் செய்யவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை அடையவும்.


இது போன்ற ஒரு திரை தோன்றும். இது புதுச்சேரி அரசின் மின் கட்டணம் செலுத்தும் வலைத்தளம் ஆகும்.அதில் வலது புறம் மேலே இருக்கக்கூடிய மூன்று கோடுகள் போன்ற பட்டணை கிளிக் செய்யவும்.


இதுபோன்ற ஒரு திரை தோன்றும் அதில் குவிக் பேமெண்ட் (QUICK PAYMENT) என்பதை அழுத்தவும்.



இது போன்ற ஒரு திரை தோன்றும். அதில் கன்ஸ்யூமர் நம்பர் (CONSUMER NO) என்ற இடத்தில் உங்களது மின் நுகர்வோர் எண்ணைக் குறிப்பிடவும். கீழே மொபைல் நம்பர் என்ற இடத்தில் (MOBILE NO) உங்களது தொலைபேசி எண்ணை பதிவிடவும். பிறகு நெக்ஸ்ட் (NEXT) என்பதை அழுத்தவும்.


பிறகு நீங்கள் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்ற விவரம் அங்கே காட்டப்படும். நீங்கள் அதற்குரிய பணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், கூகுள் பெயர் மற்றும் பல வழிகளில் செலுத்த முடியும். 





பணம் செலுத்திய பின்னர் உங்களுக்கு டிரன்சாக்சன் நம்பர் கிடைத்துவிடும். நீங்கள் பணம் கட்டிய விவரத்தை பிரிண்ட் அவுட் எடுப்பதற்கு அல்லது டிரன்சாக்சன் வெற்றிகரமாக முடிந்ததா இல்லை தோல்வி அடைந்தது என்பதை தெரிந்துகொள்ள குவிக்பே ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்யவும். அதில் தங்களுடைய டிரன்சாக்சன் நம்பர் அல்லது கன்ஸ்யூமர் நம்பர், மொபைல் நம்பர் இவற்றை பதிவிட்டு உங்களது டிரன்சாக்சன் விவரங்களை பெற முடியும்.

நீங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்ய ஹோம் பேஜில் இருக்கக்கூடிய சர்வீசஸ் என்பதை கிளிக் செய்யவும். அதில் பிபிபிஎஸ் / குவிக் பேமெண்ட் ரிசிப்ட் என்று இருக்கும். அதை கிளிக் செய்து பிறகு தோன்றும் திரையில்  உங்கள் நுகர்வோர் எண், டிரன்சாக்சன் செய்த தேதி மற்றும் மொபைல் எண் இவற்றை பதிவிட்டு, அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா கோடு ஒன்றை பதிவிட்டு டவுன்லோட் என்பதை அழுத்தவும். நீங்கள் பணம் கட்டிய ரசீது உங்கள் மொபைலில் டவுன்லோடு ஆகி விடும் அதை நீங்கள் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.




அமேசான் பே (AMAZON PAY) மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?
விளக்கம் இந்த காணொளியை பாருங்கள்..!!!



Wednesday, 20 May 2020

கூந்தலை வளரச் செய்ய குறிப்புகள்:
கூந்தல் நீண்டு வளர்வதற்கு தரமான எண்ணெய் மற்றும் ஷாம்பு எப்படி முக்கியமோ, அதேபோல் கண்டிஷனரும் கூந்தலுக்கு தேவை. ஏனெனில் எண்ணெய் கூந்தலின் வேர்கால்களை தூண்டி வளரச் செய்யும். ஆனால் அவற்றை போஷாக்குடன் வளரச் செய்ய கண்டிஷனர் தேவை. இல்லையெனில் எவ்வளவுதான் முடி வளர்ந்தாலும் எளிதில் பலமிழந்து உதிர்ந்துவிடும். கண்டிஷனர் என்பது கடைகளில் வாங்குவதை பற்றி சொல்லவில்லை. கூந்தலுக்கு போஷாக்கினையும் ஈரப்பத்தையும் தரும் எளிய பொருட்களைத்தான். அப்படியான 3 கண்டிஷனரை இப்போது எப்படி நாமே வீட்டில் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்.

 இவை எல்லாவற்றையும் கலந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசுங்கள்.

இவை கூந்தலில் உள்ள வறட்சியை போக்கிவிடும். ஈரப்பதத்தை தரும். பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்கும்.

தேங்காய் பால் கண்டிஷனர்:
தேங்காய் பால் - கால் கப்
 தேன் - 2 டேபிள் ஸ்பூன்
 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1
ரோஸ் வாட்டர் -- சில துளிகள்
கிளிசரின் - சில துளிகள்.

 முதலில் இங்கு குறிப்பிட்டுள்ள எல்லா கலவைகளையும் கலக்க வேண்டும். கடைசியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலிருக்கும் திரவத்தை ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, முடியின் நுனி வரை போட்டு, தலையை ஒரு பாலிதின் கவரால் மூடி விடுங்கள்.
 அரை மணி நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

இது மிகச் சிறந்த கண்டிஷனர். கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். வாரம் ஒரு முறை செய்தால் உங்கள் கூந்தலின் அழகை பார்த்து நீங்களே ரசிப்பீர்கள்.

தேங்காய் பால் பாதாம் எண்ணெய் கலவை: தேங்காய் பால்-1 டேபிள் ஸ்பூன்
தேன்-1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்-சில துளி
ரோஸ் வாட்டர்- சில துளி
பால் - 1 டேபிள் ஸ்பூன்

இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் தலையில் ஊற விடுங்கள். பின் நீரில் அலசவும்.

வாரம் தவறாமல் இப்படி செய்தால் முடி உதிர்தல் பொடுகு ஆகிய பிரச்சனைகள் நீங்கி, கூந்தல் அழகாய் ஜொலிப்பதை நீங்கள் உணரக் கூடும். மேலே சொன்ன எல்லாமே புரோட்டின் நிறைந்த பொருட்கள். இவை கூந்தல் வளரத் தேவையான போஷாக்கினை வேர்க்கால்கள் மூலம் அளிக்கும். வறண்ட கூந்தல் பெற்றிருப்பவர்களுக்கு, அரிப்பு, எரிச்சல் முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாது. கூந்தல் பட்டு போன்று மிளிரும்.

Saturday, 2 May 2020

How do you increase visitors to your blog using Facebook?

ஃபேஸ்புக் மூலம் உங்கள் வலைதளத்திற்கு அதிக பயனாளர்களை வரவழைப்பது எப்படி?
முகவுரை:
ஃபேஸ்புக் அல்லது முகநூல் இன்று உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்ற ஒன்றாகும்.
இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் பொழுதுபோக்கு, உலக நடப்பு தெரிந்து கொள்ள, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைப்பில் இருக்க, வியாபாரம் செய்ய மற்றும் பல காரணங்களுக்காக இதனை உபயோகித்து வருகிறார்கள்.

நீங்கள் உங்களுடைய சொந்த வலைத்தளத்தைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தவும் அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் ஃபேஸ்புக் எவ்வாறு உங்களுக்கு உதவும் என்று இந்த கட்டுரையில் காணலாம்.

நிச்சயமாக இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும் வகையில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி...!!!  இந்த கட்டுரையை படிக்கும் உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...பல...!!!

ஃபேஸ்புக் பக்கம் உருவாக்க வேண்டும்:
ஃபேஸ்புக்கில் நீங்கள் முதலில் கணக்கு தொடங்கி , அதில் உங்களுக்கென ஒரு பக்கத்தை உருவாக்கவும். அதன் தலைப்பு உங்கள் வலைதளத்தின் பெயரை ஒற்றிருந்தால் மிகவும் நலம்.

பயனுள்ள தகவல்கள் சில:
  • பதிவுகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடவும்.
  • உங்கள் பதிவுகளை உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பகிருங்கள். 
  • ஃபேஸ்புக்குரூப்களில்  உங்கள் பதிவுகளை பகிரவும்.
  • உங்கள் வலைத்தள பதிவுகளில் படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டால் காண்போரை கவரும்.
  • வழமையாக ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் பதிவுகளை பதிவிடவும்.
  • உங்கள்  ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் வலைப்பக்கத்தின் இணைப்பை கொடுக்கவும்.
_____________________________________________

JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net

Monday, 27 April 2020

Tamilnadu textbooks new syllabus std 1 to 12

Here you can get the direct link to download textbooks for classes 1 to 12.
 *தமிழ்நாடு புதிய பாடப்புத்தகங்கள் 2020-2021 - Direct Link to Download*

*1st Std New Text Books*

*2nd Std New Text Books*

 *3rd Std New Text Books*

 *4th Std New Text Books*

 *5th Std New Text Books*

 *6th Std New Text Books*

*7th Std New Text Books* 

 *8th Std New Text Books* 

*9th Std New Text Books* 

 *10th Std New Text Books* 

 *11th Std New Text Books* 

 *12th Std New Text Books*


Monday, 13 April 2020

PAPAYA - HEALTH BENEFITS

                                            Papaya

Origin

        Papaya is also called as pawpaw or papaw. It's scientific name is CARICA PAPAYA. First it was originated from America, Mexico and from Central America.
India is on top in the production of papaya.
The riped papaya can be eaten raw or can be use in cooking for many recipes.
Here I share you a picture of sweet prepared with papaya.



papaya halwa









Health benefits of papaya
  • It is rich in vitamins, minerals and carbohydrates.
  • It helps in digestion.
  • It helps to relieve constipation.
  • It nourishes your skin.
  • It protects you from arthritis pain.
  • It is good for your eyes.
  • It regulates blood pressure.
  • It regulates sugar level in diabetic patients.
  • It lowers bad cholesterol levels, helps in weight loss.
  • It improves your immunity power to fight against diseases.
  • The leaves of papaya are useful in the treatment of malaria and dengue.
  • It is a powerful antioxidant to protect yourself from cancer.
  • It helps to lower the menstrual period cramps.
  • Papaya can be used to prepare juices, milkshakes, ice cream,jam and many other sweets and recipes.
  • The latex from the green fruits ,leaves and stem are rich in papain, which is sold as a meat tenderizer.

Saturday, 4 April 2020

AIRTEL OFFERS

ATTRACTIVE OFFER FROM AIRTEL - SUPER HERO OFFER

This video is about THE SUPER HERO OFFER brought you by bharti airtel.
WATCH THE VIDEO FOR MORE DETAILS..
ஏர்டெல் நிறுவனம் தற்போது ஒரு புதிய சலுகையை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதன் சிறப்பம்சங்கள் :
1) உங்கள் மொபைல் போனில் இருக்கும் ஏர்டெல் செயலியை பயன்படுத்தி மற்ற எந்த மொபைல் எண்ணிற்கும் அவர்கள் எந்த வாடிக்கையாளர்களாக ( உதாரணமாக ஜியோ,வோடாஃபோன், ஏர்டெல் .. மற்றும் பல) இருந்தாலும் ரீசார்ஜ் செய்ய முடியும்.

2) இதற்கான 1000 கூப்பன்கள் உங்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது.

3) நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜ் பரிவர்த்தனைக்கும் 4% பணம் திரும்ப கிடைக்கும்.

கொரோனாவால் நிறைய நிறுவனங்கள் தங்கள் பணியாளர் பணிபுரியும் அளவை குறைத்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் இந்த சலுகையை அறிவித்தது ஏர்டெல் நிறுவனம்.
இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு உதவி நீங்களும் பணம் ஈட்டலாம்.





SHARE THIS VIDEO - HELPS OTHERS...
THANKS FOR WATCHING 👍

Friday, 3 April 2020

HOW TO DOWNLOAD ARTICLE FROM WIKIPEDIA?



HOW TO DOWNLOAD ARTICLE FROM WIKIPEDIA?


STEP 1 : GO TO GOOGLE SEARCH
STEP 2 : TYPE WIKIPEDIA ENGLISH ( OR ANY LANGUAGE YOU WANT )
STEP 3 : TYPE THE TOPIC YOU WANT TO SEARCH
STEP 4 : AT THE TOP OF THE ARTICLE YOU CAN SEE THE DOWNLOAD BUTTON.                      CLICK IT
STEP 5 : ARTICLE WILL BE DOWNLOADED IN PDF FORMAT 


THIS VIDEO WILL HELP YOU TO UNDERSTAND BETTER...



Friday, 27 March 2020

COVID - 19 UPDATE

CORONA VIRUS (COVID - 19)  UPDATES

Corona virus has become pandemic and spreading in more than 199 countries worldwide. No medicine have been discovered so far to stop this disease.
Only preventive measures and precautions going on to stop spreading of the deadly virus.

Please be safe 🙏
Please stay at home 🙏
Please support your country 🙏
Save yourself and save your family ...

Please follow the link to get live updates

COVID 19 LIVE UPDATE

Watch this video to know more..


Indian government is taking very quick measures to protect the people of the country. We the citizens of India what we have to do is PLEASE JUST CO-OPERATE ...to the government.


Image Credit: twitter

Union is strength if we are together we can achieve anything 🙏

Corona virus updated video today

__________________________________________________
JOIN OUR TELEGRAM CHANNEL 🙏

Welcome to my youtube channel. Stay tuned for updates !!!
https://t.me/Eventso

Youtube free promotion
Here anyone can share good quality videos. Free promotion for your YouTube channel.
https://t.me/Utube_promo

Blog promotion
Here you can share your blog post links. Free promotion for your blog or website.
https://t.me/Eventsoflife

Here we sell best quality foldable mosquito nets - wholesale & retail  - at affordable prices
https://t.me/Mosquito_Net

Wednesday, 25 March 2020

BACHELOR'S COOKING - ஆண்கள் சமையல்


ஆண்கள் சுலபமாக சமைக்க கூடிய உணவகளில் சிலவற்றை காண்போம்.

1)கோதுமை உணவு:
https://youtu.be/m7cAKnirtSA

2)சப்பாத்தி ரோல்
https://youtu.be/qIYmvIDf_MY

3)இறால் நூடுல்ஸ்
https://youtu.be/suJXQM7xk88

4) சிக்கன் வறுவல் புதுஸ்டைல்
https://youtu.be/wiRwhI30AJU

5) பூண்டு வெங்காய குழம்பு
https://youtu.be/d7FCwcGw31k

6) பிரட் சாண்ட்விச்
https://youtu.be/8p8dbkZIPj0

7) காளான் சில்லி பிரட்
https://youtu.be/GvG_JRB0Gok


9) காளான் பஜ்ஜி
https://youtu.be/mVb00M2JPKg

10) ஜாலர்
https://youtu.be/sjmOZncmEhw



பட்டை தண்ணீர் !! HEALTHY CINNAMON DRINK..!!

CINNAMON drink ...!!! பட்டை தண்ணீர்...!!!

செய்முறை:
 ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் பொடிசெய்து வைத்த பட்டை, பனங்கல்கண்டு இவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.வடிகட்டி அருந்தவும்.

பட்டை தண்ணீர் மருத்துவ பலன்கள் ஏராளம்..
அவற்றில் சில...
1)  நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
2) சருமத்திற்கு பொலிவு தரும்.
3) நீரிழிவு நோயாளிகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை சமநிலை படுத்தும்.
4) ஜலதோஷம் இருமல் குணமாகும்.
5) ஜூரண சக்தியை அதிகரிக்கும்.
6) கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
7) மூட்டு வலியைப் போக்கும்.
8) வாய் துர்நாற்றம் நீங்கும்.
9) நினைவாற்றல் பெருகும்.
10) புற்றுநோய் நோயாளிகள் உடலில் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
11) பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.


Wednesday, 18 March 2020

நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் இயற்கை பானம்

இயற்கையான முறையில் கிடைக்கும் சில இலைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன..

ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி இலை
வெற்றிலை
துளசி இலை
தூதுவளை


  • இந்த நான்கு இலைகளையும் நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்...
  • தண்ணீர் ஊற்றி அதில் இலைகளை போட்டு கொதிக்க விடவும்.
  • நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சுவைக்காக தேவைபபட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இலைகளை வடிகட்டிய பின் இந்த பானத்தை அருந்தலாம்..


இந்த காணொளியை பார்த்து விட்டு நீங்கள் நலம் நாடும் மற்றவருக்கும் பகிரவும்..

Tuesday, 17 March 2020

COVID 19 TODAY UPDATE WORLD HEALTH ORGANIZATION


CORONA VIRUS @ COVID 19 KILLS PEOPLE AROUND THE WORLD

IT SPREADS RATIO VERY HIGH IN DAY BY DAY

WATCH THIS VIDEO TO KNOW THE TODAY UPDATE ABOUT CORONA VIRUS.. DATA IS RELEASED BY WHO ( WORLD HEALTH ORGANIZATION )



BEWARE OF CORONA

6 சர்வேக்கள் மூலம் 50 அமெரிக்க டாலர்கள் சம்பாதிப்பது எப்படி ?

ஆறு சர்வேக்கள் மூலம் 50 டாலர் சம்பாதிப்பது எப்படி? நிறைய ஆன்லைன் சர்வே கம்பெனிகள் மற்றும் வலைத்தளங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது...