கோடையில் நம்மைக் காத்துக்கொள்வதெப்படி ? இது மார்ச் மாதம்தான் ஆனால் அடிக்கும் வெயிலோ இது மார்ச் மாதமா அல்லது ஏப்ரல் மே மாதமா என நினைக்க வைக்கின்றது. வெயிலின் சீற்றம் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். இதற்கு சில வழிகளில் நாம் தீர்வு காணலாம். நம்மை காத்துக்கொள்ளலாம். * முடிந்த அளவிற்கு தூய்மையான குடிநீர் அருந்தவும். * பருத்தி ஆடைகளை அணியவும். * ஆடைகளை தளர்வாக அணியவும். இருக்கமாக அணிய வேண்டாம். * இறைவன் வரமாக அளித்த உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை ( தர்பூசணி , வெள்ளரி பழம், ஆரஞ்சு ...இன்னும் பல ) சாப்பிடவும். * தியானம் செய்யலாம். மனமும் உடலும் அமைதி பெறும். * இயற்கை பானமான இளநீரை அருந்தலாம். * மோர் மற்றும் தயிர் தினமும் சாப்பிடவும். * அதிகாலை மற்றும் மாலை சூரியன் மறைந்ததும் வெளியே செல்லலாம். * உச்சி வெயிலில் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்கவும். * வெளியே செல்லும்போது வண்ண குடைகளை பயன்படுத்தவும். * கைப்பையில் தண்ணீர் பாட்டில் தவராமல் எடுத்து செல்லவும். * வீட்டில் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து பயன்ப